Subash Kumar Subash Kumar Author The part time Blogger love to blog on various categories
Title: பெண்கள் பார்க்க வேண்டிய 6 பரி சோதனைகள்
Author: Subash Kumar
Rating 5 of 5 Des:
நமது வாழ்க்கை முறையை அடிப்படையாக கொண்ட நோய்கள் இந்த காலத்தில் வருவதை தவிர்க்க முடியாத நிலையில் உள்ளோம். மேலும் , இந்த நோய்கள் 35 வயதுக...

நமது வாழ்க்கை முறையை அடிப்படையாக கொண்ட நோய்கள் இந்த காலத்தில் வருவதை தவிர்க்க முடியாத நிலையில் உள்ளோம். மேலும், இந்த நோய்கள் 35 வயதுக்கு மேற்பட்ட பெண்களை மட்டும் பாதிப்பதில்லை. இளம் பெண்களும் கூட இந்த நோய்களுக்கு பலியாகும் நிலை இப்பொழுது ஏற்பட்டுள்ளது. ஆரம்பத்திலேயே கண்டறிவதும், பரிசோதனை செய்து, சிகிச்சை எடுத்துக் கொள்வதும் தான் இந்த பிரச்சனைகளை எதிர்கொள்ளச் செய்ய வேண்டிய முதன்மையான விஷயங்களாக உள்ளன. இந்த கட்டுரையில் 18 மற்றும் அதற்கும் மேற்பட்ட வயதைச் சேர்ந்த ஒவ்வொரு பெண்ணும் செய்து கொள்ள வேண்டிய பரிசோதனைகளைப் பற்றி கொடுத்துள்ளோம்.

வைட்டமின் டி பரிசோதனை எப்பொழுது: 
எலும்பு வலி, முதுகு வலி மற்றும் கால் வலி ஆகிய அறிகுறிகள் இருக்கும் போது, இந்த பரிசோதனைகளை மேற்கொள்வது நல்லது என்கிறார் தேஜாஸ் உபாசினி என்ற எலும்பு மருத்துவ நிபுணர். ஏன்: இது இளம் பெண்கள் செய்து கொள்ள வேண்டிய முக்கியமான பரிசோதனையாகும். 80 முதல் 90 சதவீத இளம் பெண்களின் உடலில் வைட்டமின் டி பற்றாக்குறை உள்ளது. எனவே, அனைத்து பெண்களும் அந்தந்த பருவத்தில் வைட்டமின் டி பரிசோதனையை செய்து கொள்ள வேண்டியது அவசியமாகும். முதுமைப் பருவத்தில் உள்ள பெண்களைத் தாக்கும் எலும்புப்புரை நோய் (Osteoporosis) அல்ல இது. 
எப்படி: இரத்தப் பரிசோதனை மூலமாக.  

வைட்டமின் பி12 பரிசோதனை எப்பொழுது: 
புஜங்கள் மற்றும் கால்களில் உணர்வற்ற நிலையையோ அல்லது குறுகுறுப்பாகவோ இருக்கும் போதும், பலவீனமாக இருப்பதை உணரும் போதும் மற்றும் அனீமியாவினால் சமநிலையை இழந்திருக்கும் நேரங்களிலும் இந்த பரிசோதனையை செய்வது நலம். ஏன்: இந்த குறைபாடு சைவ உணவு சாப்பிடுபவர்களிடம் காணப்படுகிறது. இந்த பரிசோதனையை செய்வதன் மூலம் உங்கள் உடலில் வைட்டமின் பி12 எவ்வளவு உள்ளது என்பதை கண்டறிய முடியும். எப்படி: இரத்தப் பரிசோதனையின் மூலமாக. இந்த பரிசோதனைக்கு 10 முதல் 12 மணி நேரத்திற்கு முன்னர் எதையும் சாப்பிட வேண்டாம். 

மார்பகங்களை பரிசோதனை செய்தல் எப்பொழுது: 
மார்பகங்களில் கட்டிகள் வருவதும் மற்றும் ஒழுங்கற்ற தன்மை இருப்பதும் தான் பிரச்சனைக்கான முதல் அறிகுறி. சுயமாக பரிசோதனை செய்யும் போது கட்டிகள் இருப்பது தெரிய வந்தால், மாம்மோகிராம்ஸ் பரிசோதனைகளை செய்து கொள்ள வேண்டியது அவசியமாகும். ஏன்: இளம் பெண்களால், பெரும்பாலும் தவிர்க்கப்படும் முக்கியமான பரிசோதனைகளில் ஒன்றாக இது உள்ளது. ஒரு பெண் 25 வயதை அடைந்து விட்டாலேயே இந்த பரிசோதனைகளை செய்து கொள்ள வேண்டும். எப்படி: சுயமாக பரிசோதனை செய்து கொள்ளுதல். கட்டிகள், வீக்கங்கள் அல்லது மார்பகங்களில் அசாதாரண வளர்ச்சி ஆகியவை உள்ளதா என பரிசோதித்து பார்த்தல்.

சர்க்கரை பரிசோதனை எப்பொழுது: 
தொடர்ந்து தாகமாக இருத்தல், அடிக்கடி சிறுநீர் கழிக்கத் தூண்டுதல், திடீரென்று அதிகமாக பசி எடுத்தல், தாங்க முடியாத களைப்பு, மயக்க உணர்வு, பார்வை மங்குதல் மற்றும் குமட்டல் போன்றவை இந்த பரிசோதனையை செய்ய வேண்டும் என்று சொல்லும் அறிகுறிகளாகும். ஏன்: இளம் பெண்கள் தங்களுடைய எடையைக் குறைக்கவும் மற்றும் வயிற்றின் தொப்பையைக் குறைக்கவும் போராடி வரும் தருணம் இது. இந்த இரண்டு காரணங்களுக்காகவே, 20 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் மற்றும் அதை விட வயது குறைந்த பெண்கள் என அனைவரும் சர்க்கரை பரிசோதனையை செய்து கொள்ள வேண்டும். எப்படி: இரத்த மாதிரியை விரல் நுனியில் இருந்து எடுத்துக் கொண்டு பரிசோதனை செய்ய வேண்டும். இந்த பரிசோதனையின் முடிவுகளை சில நிமிடங்களில் தெரிந்து கொள்ள முடியும். 

பாப் ஸ்மியர் பரிசோதனை எப்போது (Pop smear test) :
அறிகுறிகளுக்காக காத்திருக்க வேண்டாம். 25 வயதை அடைந்த அனைத்து பெண்களும் செய்து கொள்ள வேண்டிய பரிசோதனை இது என்பது வல்லுநர்களின் கருத்தாகும். 65 வயதுக்கும் மேற்பட்ட பெண்கள், கடந்த 10 வருடங்களாக சாதாரண பரிசோதனைகள் செய்து கொள்ளும் பெண்கள் மற்றும் கருப்பை இல்லாத பெண்கள் (அறுவை சிகிச்சையின் மூலம் கருப்பையை அகற்றிக் கொண்ட பெண்கள்), ஆகியோர் இந்த பரிசோதனையை செய்து கொள்ள வேண்டும். ஏன்: பெண்களின் இனப்பெருக்க உறுப்புகளில் புற்றுநோய் வருவதை தடுக்க இந்த பரிசோதனை செய்யப்படுகிறது. எப்படி: இது ஒரு எளிய பரிசோதனையாகும். உங்களுடைய கருப்பையில் இருந்து செல்களை சேகரித்துக் கொண்டு, அதனை ஆய்வுக் கூடத்தில் வைத்து பரிசோதித்து முடிவுகளை கொடுப்பார்கள்.

தைராய்டு பரிசோதனை எப்போது: 
எடை அதிகரித்தல், சோம்பல், மாதவிடாய் தவறி வருதல் மற்றும் கழுத்துப் பகுதியில் வீக்கம் ஏற்படுதல் போன்றவை இந்த பரிசோதனையை செய்ய வேண்டும் என்று காட்டும் அறிகுறிகளாகும். ஏன்: தைராய்டின் அளவு அதிகமாக இருப்பதையோ (Hyperthyroidism) அல்லது குறைவாக இருப்பதையோ (Hypothyroidism) பரிசோதிக்கவே இந்த பரிசோதனை செய்யப்படுகிறது. இந்த இரண்டு வகை பிரச்சனைகளுமே நமது நகரங்களில் பரவலாக காணப்படுகின்றன. 18 வயதை அடைந்த இளம் பெண்கள் அனைவருமே இந்த சீர்கேட்டிற்கான பரிசோதனையை உடனடியாக செய்து கொள்ள வேண்டியது அவசியமாகும். எப்படி: இரத்தப் பரிசோதனை மூலமாக 




13 Jun 2014

About Author

Advertisement

Post a Comment Blogger Disqus

  1. அருமையான குறிப்புகள்

    ReplyDelete

CLICK TO SELECT EMOTICON

Emoticon
:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top
Chat here...